Physiotherapy Recovery for a child

11-12-2019 இன்று நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் நான் சந்தித்த ஓர் கடவுளின் குழந்தையை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன் குழந்தையின் பெயர் : அட்ச்சிதா வயது : இரண்டு. பிறக்கும் போது 750 கிராம் எடை மட்டுமே இருந்த இந்த குழந்தை பெரும் போராட்டத்திற்கு பின்னரே நிலை பெற்றாலும் கை கால்கள் அசைவின்றி மீண்டும் தொடர் இயன்முறை சிகிச்சைக்கு உட்பட்டது. சில மாதங்களுக்கு பின் இயன்முறை சிகிச்சை செலவினை அதன் தாய் ஏற்க முடியாத நிலையில் அதுவும் கைவிடப்பட்டது. இந்த சூழலில் நம் மருத்துவ மனைக்கு வந்த இந்த குழந்தையின் தாய், கடந்த 6 மாதங்களாக நம் மருத்துவர்கள் திருமதி சுமித்ரா மற்றும் திரு அசோக்ராஜ் இருவரும் அளித்த ஒப்பற்ற சிகிச்சை வாயிலாக தன் மகள் வியத்தகு முன்னேற்றம் அடைந்திருப்பதாக நன்றியுடன் தெரிவித்தார். நம் இயன்முறை சிகிச்சை எளிய மக்களுக்கு இறைவன் அளித்த வரம் என்று பாராட்டி மகிழ்ந்தார். அதுமட்டுமின்றி அந்த குழந்தை ஒடிவரும் அழகை படம் பிடித்து தந்திருக்கிறார்.இப்போது தான்... நம் அறக்கட்டளை அதன் பிறவிப் பயனை இதன் மூலம் பெற்றுவிட்டதாக நான் உணர்கிறேன்.இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட..ஒரு கை நீட்டி உதவி செய்... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக... என்னும் அன்னை தெரசாவின் கூற்றின் உண்மையை அறிகிறேன்.

Sundar Singaram