A general health camp was conducted in association with IMA, Pudukottai, on 27 Aug 2023 at Nachandupatti. The response was encouraging, and over 130 people attended and benefited from the camp. Various tests, including complete blood investigation (Hb.blood Sugar(fasting and Pp) urea, lipid profile HB Aic) to all participants. On the doctor's advice, an ECG for 100 people was also done. IMA senior members Dr KR Ramanathan MD, Dr D Navarathinasamy and Dr Sulthan, conducted the camp. NSWF made all arrangements, including breakfast, for all patients. We sincerely thank Shri A Muthurama of Nachandupatti for sponsoring the camp to benefit the rural public in memory of his beloved wife, the late Smt Meenakshi Achi.
Shri A Muthuram Chettiar, Trustee, NSWF, celebrated his 70th birthday at Pillayarpatti in a grand manner on the 25th of August 2023. All our health centre team and many trustees participated the function and felicitated Shri A Muthuraman Chettiar.
24th Feb 2023
இன்று வி லட்சுமிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் நம் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
மருத்துவர் திரு நாச்சியப்பன் அவர்களால் 135 பள்ளி மாணவர்களுக்கும் பல் பரிசோதனை செய்யப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு Colgate Tooth Paste, Tooth Brush மற்றும் Milk Biscuits இவற்றுடன் பல் பராமரிப்பு பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
30.01.2023
NSWF conducted a dental awareness camp for the school children at S S V Kalasalai, Nachandupatti and gave free dental kits to all students.
26.01.2023
Sri Sathappa Chettiar is building a new building for the NSWF Physiotherapy and Dental services. Entrance door (Nilai) fixing ceremony was performed on 26th Jan 23.
26 Nov 2022
நற்சாந்துபட்டியில் இன்று காலை தேவார இசை பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் 200 பேர் வரை வந்து, நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள். ஓதுவார் சிவ திரு முத்துக்குமார் சுப்பையா அவர்கள் மாணவர்களோடு அழகாக உரையாடலோடு பாடம் நடத்தினார்கள் அவருடைய குரல் அனைவரையும் கவர்ந்தது.
விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்க சாய் சூர்யா நடனப்பள்ளி குழுவினர் பொன்னார் மேனியனே என்ற பாடலுக்கு அழகுடன் நடனம் ஆடினர்.
மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளுக்குப் பதிலும் அளித்தனர்
விழா எல்லோரும் போற்ற இனிதே நிறைவு பெற்றது. இறுதியில் அனைவருக்கும் சுவையான உணவு திரு ராம் பாஸ்கர் திருமதி ஜெயா அவர்களால் வழங்கப்பட்டது.
NSWF’s Physiotherapy and Dental services operating at Sri PR Stahappa Chettiars house since the beginning. Considering the overwhelming response and future growth Sri PR Sathappa Chettiar offered to construct a new building with all facilities for the Dental and Physiotherapy wing in the vacant space behind his house. Boomi Pooja was performed on 04th June 2022 and the function was participated by our Trustees and Staff Members.
20-04-2022
நம் பல் மருத்துவப் பிரிவில் திரு PL. சுப்பையா அவர்களால் நமக்கு பரிசாக வழங்கப்பட்ட ELECTRICAL DENTAL CHAIR ன் துவக்கவிழா நேற்று மாலை இனிதே நடைபெற்றது.
நம் அறக்கட்டளை உறுப்பினர்கள் திருமதி தேனாள் ஆச்சி, திரு V இராமனாதன், திரு L வயிரவன், திரு PL சுப்பையா அவர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் திரு சிதம்பரம், திரு சம்பந்தம்
செட்டியார், திரு சுப்பிரமணியன், திரு மாணிக்கம் திரு A காசி மற்றும் பலரும் வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
திருமதி அன்னம் சுப்பையா அவர்கள் புதிய ELECTRICAL DENTAL CHAIR ஐ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்கள்.
பல் மருத்துவர் திரு நாச்சியப்பன் அவர்கள் புதிய CHAIR ன் சிறப்பு அமசங்களை விளக்கி, உடனடியாக காத்திருந்த பயனாளிகளுக்கு தன் சிகிச்சையை தொடர்ந்தார்.
நம் பல் மருத்துவம் பல வழிகளில் சிறந்த சேவையினை குறைந்த கட்டணத்தில் கொடுத்துவரும் நிலையில், இந்த CHAIR மூலம் அடுத்த பரிணாமங்களுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறது.
விழாவின் சில துளிகள் உங்கள் விழிகளுக்கு …
11-02-2021
அன்புடன் வணக்கம்
நம் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு ச. சுப்பிரமணியன் அவர்களின் பெற்றோர் திரு சம்பந்தம் செட்டியார் திருமதி வசந்தாள் ஆச்சி அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று மாத்தூர் கோவிலில் இனிதே நடைபெறுகிறது. பரந்த அனுபவமும், விரிந்த அறிவும், சிறந்த சிந்தனையும்,மிகுந்த சமூக அ்க்கரையும் நிறைந்த, இறைவன் திருவருள் பெற்ற மாமனிதர் திரு சம்மந்தம் அண்ணன் திருமதி வசந்தா ஆச்சியுடன் எல்லா நலமும் பெற்று இனிதே வாழ இறைவனடி பணிந்து வணங்கி வாழ்த்துவோம். பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும் அருமை மைந்தர் திரு/ திருமதி சுப்பிரமணியம் அவர்களையும் பாராட்டி மகிழ்வோம்.
Our Trustees participated in our staff Ms Suganya wedding and gifted a gold chain on behalf of the Trust. NSWF value the service rendered by the team Members and we are always grateful to them for their service to our region.
26-01-2021
இன்று காலை நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள TRACTION MACHINE திரு சம்பந்தம் செட்டியார் அவர்களால் துவக்கி வைக்கப் பெற்றது.
18-01-2021
அனைவருக்கும் அன்புடன் வணக்கம்
நம் சமூகநல அறக்கட்டளை 2021 ஆம் ஆண்டில் காலடி வைத்தபின் காணும் சில மாற்றங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. அறம் செய விரும்பு எனும் இனிய பகிர்ந்து மகிழும் அனுபவத்தை அனைவர் மனதிலும் விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானதே நம் அறக்கட்டளை.இந்தப் பயணத்தில் நம்முடன் இணைந்து தொடர்ந்து வரும் அனைவரும் இந்த அனுபவத்தை உணர்ந்து மகிழ்ந்திருப்பார்கள். அவ்வண்ணம் உணர்ந்து மகிழ்ந்த ஒருவர் நம் அறக்கட்டளைக்கே கொடுத்து மகிழும் அனுபவத்தை அவருக்கு நம் அறக்கட்டளை வழங்கியிருக்கிறது.அதன் விளைவே இன்று திரு கிரில்லோ KR வீரப்பன் அவர்கள், தன் அன்புக்குரிய துணைவி திருமதி VR கல்யாணி ஆச்சி நினைவாக வழங்கியிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டிடம்.
2. மக்களுக்கு மிக அருகில், புதிய இடம், புதிய கட்டிடம், புதிய உணர்வுகளோடும் பொறுப்போடும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும் புத்தாண்டில் நம் பணிகள் தொடரட்டும்.
3. நம் இயன்முறைச் சிகிச்சை பிரிவு (Physiotheraphy) இன்னும் தன் சேவையை சிறப்பாக்க, புதிதாக ELECTRONIC INTERMITTENT TRACTION UNIT என்னும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது.இதன் மதிப்பு ரூ 25000. நம் சேவையில் இது மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சி.
4. திரு கிரில்லோ KR வீரப்பன் நமக்கு அன்பளிப்பாக வழங்கும் மருத்துவ மனைக் கட்டிடத்தின் பத்திரப் பதிவிற்கு ஆகும் முத்திரைத்தாள் மற்றும் தீர்வைக் கட்டணங்கள் ஆகிய செலவுகளை நம் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. இதற்கான செலவு ரூ 100000 ஆகலாம். இதனை நாம் பெருமையுடன் பகிர்ந்து கொள்வோம்
5. மருத்துவ மனை கட்டிடத் திறப்புவிழா, 15-02-2021 அன்று மாண்புமிகு நீதி அரசர் திரு M சொக்கலிங்கம் அவர்கள் திறந்து வைக்க சீரோடும் சிறப்போடும் நடைபெற உள்ளது. இது நாம் அனைவரும் தவறாமல் பங்கேற்க, அண்ணன் கிரில்லோ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய விழா. பங்கேற்று மகிழ்வோம்.
வணக்கம் !
இன்னும் ஒர் நற்செய்தி !
நம் மருத்துவ நல மையத்திற்கு டொரோண்டா கனடாவில் வசிக்கும் திரு அண்ணாமலை முத்து அவர்களும், மனமுவந்து நம் கல்வி நிதிக்கு தம் பங்களிப்பாக ரூ 17000/- வழங்கி இருக்கிறார்கள். நம் அறக்கட்டளை, மருத்துவ நலம் மட்டுமின்றி இளைய தலைமுறையின் ஒளிமயமான எதிர்காலத்திலும் அக்கரையொடு ஆண்டு தோறும் 50 ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு துணை நிற்கிறது. ஆதலால் கல்வி நிதிக்கு கை கொடுக்கும் திரு அண்ணாமலை முத்து அவர்களுக்கு நாம் அன்புடன் நன்றி சொல்வோம்
அறம் செய விரும்பும் அனைவரையும் வாழ்த்துவோம் ! வணங்குவோம் !
30-12-2020
வணக்கம் !
நம் அறக்கட்டளைக்கு டொரோண்டா, கனடாவில் வசிக்கும் திரு கண்ணப்பன் அவர்கள் ரூ 28400/- ( CAD 500 ) நிதி வழங்கியிருக்கிறார்கள். ( JOY OF GIVING ) சமூக அக்கறையோடு. ஈகை மனப்பாங்குடன், கொடுத்து மகிழும் உயர்ந்த உள்ளங்கள், நம் நற்செயல்களுக்கு நற்துணையாக நம்பிக்கையாக முன்னிற்பதை மகிழச்சியுடன் வரவேற்போம்.
நாடு இனம் மதம் என்னும் எல்லைகளை கடந்து எங்கிருந்தாலும் உதவும் நல்ல உள்ளங்களை நன்றியுடன் வாழ்த்தி வணங்குவோம்
🙏
தீபாவளி கொண்டாட்டம் 2020
பெற்றதன் பயனை பிறருக்கும் கொடுப்போம்என்பதன் பொருள் உணர்ந்து, மற்றவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை விதைப்போம் என்பதை மெய்ப்பிக்க நாம் இந்த ஆண்டும் எளிய மக்களுக்கு தீபாவளிப் பரிசாக சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். சென்ற ஆண்டு 100 பேருக்கு வழங்கிய நாம் இந்த ஆண்டு 220 பயனாளிகளுக்கு இன்னும் தரமான பருத்தி சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். ரூ 122000/- மதிப்புள்ள இந்த பரிசுப் பொருட்கள் முற்றிலும் நன்கொடையாளர்களால் வழங்கப் படுகிறது.
இன்று காலை 30-10-2020 நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் திரு டத்தோ மெய்யப்ப அண்ணன் அவர்கள் பயனாளிகளுக்கு பரிசினை வழங்க, திருமதி தேனாள் ஆச்சி, திரு சம்பந்தம் செட்டியார் மற்றும் திரு இராமனாதன் செட்டியார் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கொடுத்து மகிழ்ந்த அந்த நிகழ்வை நாமும் கண்டு மகிழ்வோம்
16-10-2020
கல்வி உதவி நிதி திட்டம் 2020
நம் கல்வி உதவி நிதி திட்டத்தின் இரண்டாம் பகுதியாக இன்று 11 மாணவர்களுக்கு ரூ 43500/- நிதி வழங்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஏற்கனவே நம்மிடம் உதவி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டும் நிதி வழங்கப்படுகிறது.
எதிர்காலம் இளைஞர்களைச் சார்ந்தே இருப்பதால் நம் அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களின் கனவு மெய்ப்பட தன் பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறது.
NSWF and it's Chairman, Sri KM PR Sathappan (PRS) always believe and ENJOY THE JOY OF GIVING!
Our Children's Festival Program ARUMBUGAL AAIRAM - MAKILTCHI THIRUVILA that was held in October 2019 in conjunction with PRS's Birthday, was planned to be repeated this year. Due to Covid 19, the Function was held in a simple manner.
Headmasters from the following schools were present at the function:
1. Kottur
2. South Thalampatti
3. Kummangudi
4. North Thalampatti
5. Arasanthampatti
6. Arangiranpatti
7. Paranikudipatti
8. Panneerpallam
9. Malayalingapuram
10. Mallangudi
11. Nachandupatti
12. Rarapuram
13. Poolampatti
The President and Vice President of Nachandupatti Panchayat Union, and some of our Donors and well wishers were also present to grace the Function.
Six children from Nachandupatti School were present, representing the 515 students.
Following refreshments, the GIFT PACKS for the children were distributed through the respective schools. The Headmasters, Teachers and invited guests were also presented with Gift packs.
PRS has expressed the wish to continue with this CHILDREN'S FESTIVAL yearly. Hopefully, we can invite all the 515 children for a Get Together with Fun and Games in 2021.
Some photos taken at the function are now shared with you.
இன்று நாம் ஆண்டுதோறும் வழங்கும் கல்வி நிதி உதவித்தொகை (2020-21)
11 மாணவர்களுக்கு ரூ 50000/- வழங்கப் பட்டது. நம் கல்விக்குழு தலைவர் திரு ரகுபதி சுப்பிரமணியன் திருமதி தேனாள் ஆச்சி அவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கினார்கள்.
Nachandupatti Branch Library was reopened on 2 September 2020 at a simple ceremony held at the Library premises. The reopening was officiated by Datin Mangayarkarasi Meyyappan. The invited guests included President, Vice President and Ward members of Nacandupatti Panchayat Union as well as Library officials.
The Library premises was recently renovated beautifully. The cost of renovation was borne by Sri KM PR Sathappa Chettiar and Srimathi S Alagammai Achi. Library officials greatly appreciated their help.
At the same function the following joined the growing list of sponsors:
1. KM PR S Periakaruppan Rs.5,000
2. KM PR S Kumarappan Rs.5,000
3. KM PR S Alagappan Rs.5,000
4. R Sithambaram (Panchayat President) Rs.1,000
5. S Subbiah (Panchayat Vice President) Rs.1,000
Members of the public can now once again visit the Library and have access to a wide range of books and magazines. Newspapers will be available shortly. Let us again cultivate the once popular reading habit!
27th Aug 20
நேற்று முதல் நம் மருத்துவ நல மையம் மீண்டும் அதன் பணியை துவக்கியிருக்கிறது. இந்த முறை பாதுகாப்பு நடைமுறைகள் இன்னும் அதிக முனைப்போடு செயல்படுத்தப் படுகின்றன.
பணியாளர் அனைவருக்கும் N 95 Mask மற்றும் Face Shield வழங்கப் பட்டிருக்கிறது. பயனாளிகளை தொட்டு பரிசோதிப்பதை தவிர்க்க Infrared Thermometer பயன்படுத்தப் படுகிறது. முன் எச்சரிக்கையுடன் அன்பான நம் அக்கறை இனியும் தொடரும் ...
தன்னலமற்ற உழைப்புடன் பணியாற்றும் நம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் நன்றியுடன் பாராட்டுவோம்
நம் பணியாளர் திருமதி மகாலட்சுமி தன் சீருடையில்....