NSWF Board Meeting
trustee-remote-meeting.jpeg

NSWF UPDATE 21st June 2020

When the whole world was in lockdown, NSWF was actively and silently found its way to reach out many under privileged who are in need of support. Which includes various activities like offering milk to rural children, basic provisions to very poor families, food packets to various villages and so on….NSWF Trustees and Donors are the backbone of all these activities. NSWF Trustees enthusiastically participated in an online Board Meeting from all over the Globe to discuss the possibilities of expanding the “Joy of Giving” on 21st Jun 2020. Thank You all for your participation 🙏

Sundar SingaramComment
Covid 19 Precaution at NSWF
kabasura-kudineer.jpeg
Covid19-precaution.jpeg

வருமுன் காப்போம் நம் மருத்துவ மனையில் இன்று முதல் பயனாளிகள் அனைவருக்கும் கட்டணமின்றி கபசுர குடிநீர் வழங்கப் படுகிறது. சமுக இடைவெளி, முக கவசம் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளும் தவறாமல் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவை அனைத்தையும் நிர்வகிக்கும் நம் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் மற்றும் நமக்கு வழிகாட்டும் நம் மருத்துவர்களையும் மனம் திறந்து பாராட்டுவோம் ! நீங்களும் பாராட்ட ... செல்வி சுகன்யா அலைபேசி : 87548 88801

Sundar SingaramComment
An Appeal by NSWF for Contributions for PM's Insurance Project
pm-insurance-scheme.jpeg

One of the projects identified by NSWF is to support the following insurance based welfare schemes introduced by our Honble PM Modi: • Pradhan Mantri Suraksha Bima Yojana. This is basically a Personal Accident insurance policy providing personal accident cover for Rs.2 lakhs, for an annual premium of just Rs.12. • Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana. This is basically a Term Life insurance policy providing life insurance cover for Rs.2 lakhs, for an annual premium of just Rs 330. • For a cost of just Rs.342 per annum, insurance coverage of Rs.4 lakhs can be obtained under the scheme. We want to help at least 100 less fortunate people in our area to obtain this coverage. The project cost is Rs.25,000. For the year 2019, NSWF arranged 72 Personal Accident policies at a cost of Rs.864. NSWF also arranged 42 Life Insurance policies at a cost of Rs.13,860. These policies are due for renewal by end May 2020. NSWF would like to help in the renewal of policies and add some more deserving cases. During 2019, a claim of Rs.2 lakhs was succesfully received for an unfortunate victim. Though a life cannot be replaced, this Rs.2 lakhs received from insurance helped the family to overcome their immediate financial needs. We call upon the kind hearted Donors for 2019 and other well wishers to participate in this year's project. Please remember: Every Rs.1,000 contribution by any one of us can help three families. Those of you interested to contribute Rs.1,000 or more can get in touch with us ENJOY THE JOY OF GIVING!

Nachandupatti Panchayat - A Role Model
panchayat-president.jpg

கொரோனா ஊரடங்கு 4வது முறையாக தொடர்வதால் நச்சாந்துபட்டி ஊராட்சியில் உணவளித்து மகிழ்வோம் நிகழ்வின் 38 நாள் (23.5.20) மதிய உணவு திரு N.குமரப்ப செட்டியார் அவர்களால் 100 நபர்களுக்கு எள்ளுசாதம் &கொண்டக்கடலை மசாலை பார்சல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்கபட்டது. நச்சாந்துபட்டி பெ.ராம. குடும்பத்தை சேர்ந்த திரு நடராஜன் செட்டியார் மகன் N.லக்ஷ்மணன் செட்டியார் அவர்களால் 100 நபர்களுக்கு தயிர்சாதம் &கொண்டகடலை மசாலை பார்சல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

R.சிதம்பரம் தலைவர் ஊராட்சி மன்றம். நச்சாந்துபட்டி.

Corona Relief Rural Community by A Donor who don't want his identity !!
corona-relief-09may20.jpeg

NEWS FROM NSWF 9 May 2020 Nachandupatti Social Welfare Foundation (NSWF) is pleased to announce the continuation of supply of Rice and other Provisions to the needy people in the rural villages around Nachandupatti. A WELL WISHER (a close Associate of NSWF who does not wish to disclose his name) has donated Rs.25,000 for this purpose. This has been used to purchase 80 bags of Rice and other Provisions costing Rs.300 each as mentioned below: 1. Rice 2 kg 2. Thuvaram Paruppu 500 gm 3. Kadalai Paruppu 250 gm 4. Salt 1 kg 5. Rava 500 gm 6. Wheat Flour 500 gm 7. Vermicelli (Semeya) 1 pack 8. Sugar 250 gm 9. Washing Soap 1 pc These bags have been distributed to people who have not received any such aid in the past. They are from Malampatti, Mettupatti, Ambal Nagar, Aringranpatti, Nachandupatti Church as well as Cleaning Staff from Primary Health Centres in Nachandupatti, Panayapatti, Virachilai and Konapat. Some photos taken during the distribution are attached. NSWF WOULD LIKE TO THANK OUR WELL WISHER FOR HIS TIMELY HELP! HE ENJOYS THE JOY OF GIVING! JOIN HIM AND BE HAPPY!!

Social Distancing at NSWF Clinic
06mayclinic.jpeg

09-05-2020 நம் மருத்துவ நல மையம் இன்று காலை.... மருத்துவர் வருகைக்கு காத்திருக்கும் மக்கள். சமூக இடைவெளி, முக கவசம் இவைகளை பொறுப்புடன் பின்பற்றும் காட்சி... வருமுன் காப்போம்

NSWF Services Resumed
reopen1.jpeg

06-05-2020 ஊரடங்கிற்குப் பின் , நம் மருத்துவ நல மையம் இன்று மாலை திறக்கப் பட்டது. Dr இரவீந்தர் ராம் அவர்களின் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு 35 பயனாளிகள் வந்திருந்தனர். கை கழுவுதல், முக கவசம், தனி மனித இடைவெளி போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப் பட்டன. இன்று நம் இயன்முறை சிகிச்சை பிரிவும் பாதுகாப்புடன் இயங்கியது. பாதுகாப்பு நடைமுறைகளை இனி வரும் நாட்களில் இன்னும் முனைப்புடன் செயல் படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. வருமுன் காப்போம் !

Sri N Meyyapan Donation for Milk Project
537f2209-5c1a-44a4-a4d2-d66e6e0473f6.jpeg

நன்றி சொல்வோம் ! நம் “உதவிக்கரம்”. ஆவின் பால் வழங்கும் திட்டத்திற்கு நச்சாந்துபட்டி திரு ந. மெய்யப்பன் அவர்கள் (திருப்பூர் ) மனமுவந்து ரூ 5000/- வழங்கி யிருக்கிறார்கள். அவர்களுக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம் ! மேலும் இன்றுடன் முடிவுற்ற நம் ஆவின் பால் வழங்கும் திட்டம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மனிதர்கள் தங்கள் வருமானத்தை மீண்டும் தேடிக்கொள்ளும் வரை, நம் அன்பு அவர்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறோம். நன்றி !

Lunch Distribution at Periayur on 05 May 20
periayur-05may205.jpeg

Nachandupatti Social Welfare Foundation (NSWF) extends its arm to the less fortunate people in Peraiyur area today. 250 Lunch packets containing Tomoto rice and Cabbage masala together with a Banana each are distributed to help the needy in the area. With the relaxation in the movement of people, it is hoped that the livlihood of people will improve. Join NSWF as a Donor and Enjoy the Joy of Giving!

Resuming our Healthcare Services Post Corona
dr-sureshkumar.jpeg

நம் புதுக்கோட்டை மாவட்டம் ஆரஞ்சு வண்ணமாக கருதப்பட்டு நாளை முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப் பட்டிருப்பதை நாம் அறிவோம். ஆதலால் வரும் 06-05-2020 புதன் கிழமை முதல் நம் மருத்துவ நல மையம் மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த வாரம் 06-05-2020 புதன்கிழமை மற்றும் 08-05-2020 வெள்ளிக்கிழமை Dr ரவீந்தர் ராம் அவர்களும் 09-05-2020. சனிக்கிழமை அன்று Dr நிர்மல வதனா அவர்களும் வழக்கம் போல் மாலை 4 மணி முதல் 6 மணிவரை மருத்துவ ஆலோசனை வழங்குவார்கள். நம் பயனாளிகள் அனைவரும் அரசு அறிவித்துள்ள சமூக விலகல், முக கவசம் கை கால்கள் கழுவுதல் போன்ற எச்சரிக்கைகளை தவறாமல் பின்பற்றி, நோய் பரவலைத் தடுக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறோம். நம் இயன்முறை சிகிச்சை பிரிவும் (Physiotheraphy) வழக்கம் போல் திங்கள், புதன், வெள்ளி 3 நாட்களும் மாலை 3 மணி முதல் 6 மணிவரை மட்டும் செயல்படும். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் நன்றி ! பிகு : அடுத்த வாரம் முதல் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் Dr ரவீந்தர் ராம் அவர்களையும் வியாழக் கிழமை தோறும் Dr சுரேஷ் குமார் அவர்களையும், சனிக் கிழமை Dr நிர்மல வதனா அவர்களையும் சந்திக்கலாம்.

NSWF Reach out to under privileged during Corona lockdown
milk-donation-child1.jpeg

அனைவருக்கும் அன்புடன் வணக்கம் ! அன்னைத் தமிழுக்கு முதல் எழுத்து “அ” அந்த முதல் எழுத்துக்கு அவ்வை தந்த விளக்கம், அறம் செய விரும்பு என்பதாகும். இதனை தன் தாரகமந்திரமாய் கொண்டு நம் அறக்கட்டளை எளியவர் துயர் துடைக்கும் பணியில் தன்னால் இயன்றது அனைத்தையும் இன்றுவரை செய்து வருகிறது. நோய்தொற்று நம்மை இல்லங்களில் முடக்கிய பொழுதில், வருமானம் இன்றி வாழ்வாதாரத்தையும் இழந்த எளிய கிராம புற மக்களுக்கு, தன் உதவிக்கரம் எனும் திட்டம் வாயிலாக, கீழ் காணும் நற்பணிகளை மேற்கொண்டது. 1. அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் அதில் பயின்ற 5 வயதிற்கு உட்பட்ட 359 பச்சிளம் குழந்தைகளுக்கு 40 நாட்களுக்கு ஆவின் பால் அவர்கள் இல்லத்திற்கே சென்று வழங்கப் பட்டது. 2. நச்சாந்துபட்டி ஊராட்சி மன்றத்தின் வாயிலாக நம் முதன்மை நிதி பங்களிப்புடன் 175 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் உணவுப் பொருட்களும் வழங்கப் பட்டது. 3. ஆவின் பால் வழங்கப் பெற்ற 359 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் 2 கிலோ அரிசியுடன் உணவுப் பொருட்களும் அளிக்கப்பட்டன. 4. ஊரின் எல்லைகளைத் தாண்டி உறவுகளைத் தேடி விரிந்த நம் உதவிக்கரம், 10 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை ஏற்று, 10 ஊர்களில் வாழும் எளிய குடும்பங்களுக்கு, 3 கிலோ அரிசியுடன் 7 உணவுப் பொருட்களையும் வழங்கியது. மருத்துவப் பணியுடன் முதியோர் மற்றும் மாணவர்கள் நலத்திலும் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ள நம் அறக்கட்டளை தன் பெயருக்கு ஏற்ப சமூக நலத்திலும் என்றும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த தருணத்தில் நம் அறக்கட்டளைக்கு என்றும் துணை நின்று, உணர்வாக உயிராக உடன் பயணிக்கும் நன்கொடையாளர்கள் அனைவரையும் நாம் நன்றியுடன் வாழ்த்தி வணங்குவோம்

Great Service by Nachandupatti Panchayat
panchayat-corona9.jpeg

Great job done by Nachandupatti Panchayat! In appreciation of what has been done, more contributions are flowing in. Thanks to Er RM Andiappa Chettiar and Susila Achi for celebrating their grandson Annamalai's birthday by contributing Rs.10,000 in this manner. 🎂🎂 And for the other perfect gentleman / lady who do not even want to disclose their name and contributing Rs.10,000 I take my hats off for you!🎩🎩 Best Wishes to the President, Vice President and Ward Members of Nachandupatti Panchayat for providing this valuable service.💐💐 ENJOY THE JOY OF GIVING!

Sundar Singaram
Essential Provisions Aid to Staffs of "Nal Vazhvu Maiyam"
panchayath-corona-aid1.jpeg

08-04-2020 நச்சாந்துபட்டி ஊராட்சி மன்றத்தின் மக்கள் நலத் திட்டம் வாயிலாக வழங்கப் பட்ட பரிசுப் பொருட்களின் தொகுப்பு இன்று நம் நல வாழ்வு மையப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்ற உப தலைவர் திரு சுப்பையா அவர்களால் வழங்கப் பட்டது. நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த வேளையிலும், இடைவெளி இன்றி தொடர்ந்து பணியாற்றி, மூத்த குடிமக்கள் அனைவரின் நலம் காக்கும் நம் நல வாழ்வு மையப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் தலை வணங்கி நன்றி சொல்வோம் !

Sundar Singaram
NSWF Staffs Covid Protection
nswf-post-corona.jpeg

21-03-2020 இன்று நம் மருத்துவ நல மையத்தில் மருத்துவர் திருமதி நிர்மலவதனா அவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். நம் மருத்துவ மனை உதவியாளர்கள் அனைவரும் முக கவசத்தைடன் பணி ஆற்றும் காட்சி. நம் சமூக நல அக்கரைக்கோர் சாட்சி. இதுவன்றியும் பயனாளிகள் அனைவரும் கைகளை கழுவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் ! வளமுடன் வாழ்வோம் !

Sundar Singaram
Vasthu Pooja for Land Donated by Sri Kirlo Veerappan

05-03-2020 இன்று அடிக்கல் நாட்டுவிழா ! அன்பு தெய்வத்திற்கு எழுப்பும் அழகான ஆலயத்திற்கு.... எண்ணங்கள் அழகானால் வண்ணங்கள் அழகாகும். வண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும். காலத்தை வென்ற கற்கோவில் ! இது கனிவைகாட்டும்பொற்கொவில் ! என்னறென்றும் உங்கள் பெயர் நிலைக்கட்டும் ! கிரில்லோ வீரப்பன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நன்றியுடன் வாழ்த்துகள் ! 🙏🙏🙏

Sundar Singaram
NSWF Home Service

NSWF HOME SERVICE வணக்கம், அன்போடு அனைவருக்கும் ! நச்சாந்துபட்டியில் காலில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு இரத்தம் வடிந்த நிலையில், வீட்டை விட்டு வெளியில் வர இயலாமல் வலியுடன் வாடிய 90 வயது மூத்த பெண்மணிக்கு, வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க, நமக்கு இறைவன் அளித்த வாய்ப்பினை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறோம். இந்த சிகிச்சையில் நோயாளியின் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்த நம் மருத்துவர் திருமதி நிர்மல வதனா அவர்களுக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும் மருத்துவர் அறிவுரையின்படி ஒரு வாரம் தினமும் வீட்டிற்கு சென்று மருந்துகள் இட்டு, கட்டு கட்டி, நோய் முற்றும் குணமாக உதவிய செவிலியர் திருமதி திவ்யா அவர்களையும், இதனை உடனிருந்து நடத்திய செல்வி சுகன்யா அவர்களையும் நன்றியுடன் பாராட்டுவோம் ! அன்பிற்கும் அன்பான சேவைக்கும் எல்லைகள் ஏதுமில்லை ! மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் !

Sundar Singaram
Medicine Donation by Sri L Kumar, Virachilai

16-01-2020 NSWF NEWS Thiru L Kumar, Kasiviswanathan Medical Agencies, Madurai S/o Thiru VE Lakshmanan Chettiar, Virachilai has contributed Rs 11800/- Worth of medicine ( Neurobion Injection 1260 Amps ) this month to our Medical Center. Thiru Kumar has been contributing Free Medicine to our Hospital regularly. Let us appreciate and thank him for his JOY OF GIVING.

neurobion-injection.jpg
Sundar Singaram