NSWF Home Service

NSWF HOME SERVICE வணக்கம், அன்போடு அனைவருக்கும் ! நச்சாந்துபட்டியில் காலில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு இரத்தம் வடிந்த நிலையில், வீட்டை விட்டு வெளியில் வர இயலாமல் வலியுடன் வாடிய 90 வயது மூத்த பெண்மணிக்கு, வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க, நமக்கு இறைவன் அளித்த வாய்ப்பினை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறோம். இந்த சிகிச்சையில் நோயாளியின் வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்த நம் மருத்துவர் திருமதி நிர்மல வதனா அவர்களுக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும் மருத்துவர் அறிவுரையின்படி ஒரு வாரம் தினமும் வீட்டிற்கு சென்று மருந்துகள் இட்டு, கட்டு கட்டி, நோய் முற்றும் குணமாக உதவிய செவிலியர் திருமதி திவ்யா அவர்களையும், இதனை உடனிருந்து நடத்திய செல்வி சுகன்யா அவர்களையும் நன்றியுடன் பாராட்டுவோம் ! அன்பிற்கும் அன்பான சேவைக்கும் எல்லைகள் ஏதுமில்லை ! மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் !

Sundar Singaram