NSWF Reach out to under privileged during Corona lockdown

milk-donation-child1.jpeg

அனைவருக்கும் அன்புடன் வணக்கம் ! அன்னைத் தமிழுக்கு முதல் எழுத்து “அ” அந்த முதல் எழுத்துக்கு அவ்வை தந்த விளக்கம், அறம் செய விரும்பு என்பதாகும். இதனை தன் தாரகமந்திரமாய் கொண்டு நம் அறக்கட்டளை எளியவர் துயர் துடைக்கும் பணியில் தன்னால் இயன்றது அனைத்தையும் இன்றுவரை செய்து வருகிறது. நோய்தொற்று நம்மை இல்லங்களில் முடக்கிய பொழுதில், வருமானம் இன்றி வாழ்வாதாரத்தையும் இழந்த எளிய கிராம புற மக்களுக்கு, தன் உதவிக்கரம் எனும் திட்டம் வாயிலாக, கீழ் காணும் நற்பணிகளை மேற்கொண்டது. 1. அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் அதில் பயின்ற 5 வயதிற்கு உட்பட்ட 359 பச்சிளம் குழந்தைகளுக்கு 40 நாட்களுக்கு ஆவின் பால் அவர்கள் இல்லத்திற்கே சென்று வழங்கப் பட்டது. 2. நச்சாந்துபட்டி ஊராட்சி மன்றத்தின் வாயிலாக நம் முதன்மை நிதி பங்களிப்புடன் 175 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் உணவுப் பொருட்களும் வழங்கப் பட்டது. 3. ஆவின் பால் வழங்கப் பெற்ற 359 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் 2 கிலோ அரிசியுடன் உணவுப் பொருட்களும் அளிக்கப்பட்டன. 4. ஊரின் எல்லைகளைத் தாண்டி உறவுகளைத் தேடி விரிந்த நம் உதவிக்கரம், 10 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை ஏற்று, 10 ஊர்களில் வாழும் எளிய குடும்பங்களுக்கு, 3 கிலோ அரிசியுடன் 7 உணவுப் பொருட்களையும் வழங்கியது. மருத்துவப் பணியுடன் முதியோர் மற்றும் மாணவர்கள் நலத்திலும் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ள நம் அறக்கட்டளை தன் பெயருக்கு ஏற்ப சமூக நலத்திலும் என்றும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த தருணத்தில் நம் அறக்கட்டளைக்கு என்றும் துணை நின்று, உணர்வாக உயிராக உடன் பயணிக்கும் நன்கொடையாளர்கள் அனைவரையும் நாம் நன்றியுடன் வாழ்த்தி வணங்குவோம்