Our staff Nurse Meena is getting married 16th Jan 2020 at Tiruppur. Myself and our Trustee Thiru Krillo Veerappan attended the Marriage and blessed her. We have also gifted a Saree and Cash Gift Rs 5001/- and Rs 501/- Let us all wish her a Happy Married Life.
12-12-2019 இன்று வியாழக்கிழமை வாரந்தோறும் மருத்துவர் திரு சுரேஷ் குமார் MD DA நம் மருத்துவ மனைக்கு வரும் நாள். கோவில் திருவிழா போல் மக்கள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற வரக்காண்கிறோம். புதுக்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வாரமும் எளிய மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் வரும் மருத்துவர் திரு சுரேஷ் குமார் அவர்களை நன்றியுடன் பாராட்டுவோம்
11-12-2019 இன்று நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் நான் சந்தித்த ஓர் கடவுளின் குழந்தையை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன் குழந்தையின் பெயர் : அட்ச்சிதா வயது : இரண்டு. பிறக்கும் போது 750 கிராம் எடை மட்டுமே இருந்த இந்த குழந்தை பெரும் போராட்டத்திற்கு பின்னரே நிலை பெற்றாலும் கை கால்கள் அசைவின்றி மீண்டும் தொடர் இயன்முறை சிகிச்சைக்கு உட்பட்டது. சில மாதங்களுக்கு பின் இயன்முறை சிகிச்சை செலவினை அதன் தாய் ஏற்க முடியாத நிலையில் அதுவும் கைவிடப்பட்டது. இந்த சூழலில் நம் மருத்துவ மனைக்கு வந்த இந்த குழந்தையின் தாய், கடந்த 6 மாதங்களாக நம் மருத்துவர்கள் திருமதி சுமித்ரா மற்றும் திரு அசோக்ராஜ் இருவரும் அளித்த ஒப்பற்ற சிகிச்சை வாயிலாக தன் மகள் வியத்தகு முன்னேற்றம் அடைந்திருப்பதாக நன்றியுடன் தெரிவித்தார். நம் இயன்முறை சிகிச்சை எளிய மக்களுக்கு இறைவன் அளித்த வரம் என்று பாராட்டி மகிழ்ந்தார். அதுமட்டுமின்றி அந்த குழந்தை ஒடிவரும் அழகை படம் பிடித்து தந்திருக்கிறார்.இப்போது தான்... நம் அறக்கட்டளை அதன் பிறவிப் பயனை இதன் மூலம் பெற்றுவிட்டதாக நான் உணர்கிறேன்.இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட..ஒரு கை நீட்டி உதவி செய்... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக... என்னும் அன்னை தெரசாவின் கூற்றின் உண்மையை அறிகிறேன்.
NSWF News 29-11-2019 Further to extend and improve our PHYSIOTHERAPY Services now we have made available some of the accessories needed for the patients. Now the best quality products are available with us at wholesale prices. Patients can now buy and use them for immediate results, at their own convenience in our Physiotherapy Center. The products are below for your information.
NSWF NEWS. 06-11-2019 Our Physiotherapy Center at Kamban Street has been renovated to provide a new look and privacy to the patients. ( See Photos ) Our Physiotherapy service is now provided thrice a week( Monday, Wednesday and Friday ) with more than 10 patients visiting from out stations also. Now we are treating 5 children less than 5 years old in our Center, who are unable to stand or walk. A good progress is achieved with the excellent efforts of our Physiotherapist Mr Ashok Raj . We request all of our Trustees and Donors to utilise our Physiotherapy Services.
JOY OF GIVING Through the kind sponsorship of (Thiru KM PR S Alagappan of Computer Waves, Chennai), a Laptop Computer was presented to a needy10th standard student Kokila recently. Incidentally, Kokila is a Boxing Champion from RCHS School in Nachandupatti and needs a Laptop in order to pursue Computer Studies. Our best wishes to Kokila (see the picture below) for success in her endevour and a big thanks to Computer Waves!👏👏
🔉🔉News from NSWF: It's true! The JOY OF GIVING reflects and reaches the GIVER in multiples!!😁😁😁 As we sowed the seeds of JOY in 500 tiny kids at the "Arumbugal Ayiram" function, one of our Trustees, Sri Krillo Veerappan of Nachandupatti ( Krillo Garments, Thiruppur ) has come forward to offer a piece of land measuring 1,300 sq ft in a prime location in Nachandupatti to NSWF. The land is situated at Kamban Street, near ICICI Bank. 😀 Sri Krillo Veerappan has also agreed to construct a single storey building of about 1,000 sq ft for the use of Nachandupatti Healthcare Centre, a unit of NSWF, as his contribution to NSWF. He is doing all this in memory of his late wife, whom he cherished very much. 🏠 Subject to completion of the relevant regulatory reguirements, we expect to commence the building work by January, 2020 and complete by December 2020. 🎊 We are fortunate to have Sri Krillo Veerappan as one of our caring Trustees. We thank him wholeheartedly for his substantial contribution. 👏👏 Sri Krillo Veerappan ENJOYS THE JOY OF GIVING! Join him and ENJOY!! 🙏
11-10-2019 அரும்புகள் ஆயிரம் ஓவியப் போட்டி ஒவியப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறும் இரண்டு இளம் ஓவியர்களுக்கு பொன்னான பரிசுகள் காத்திருக்கின்றன. 🌺முதல் பரிசு ஒரு கிராம் தங்கம்🌺👌 இரண்டாம் பரிசு ஒவ்வொரு பிரிவிலும் அடுத்து இடம் பெறும் நான்கு இளம் ஓவியர்களுக்கு வெள்ளிப் பரிசுகள் வழங்கப்படும் ( மொத்தம் 8 ) 😁இரண்டாம் பரிசு 10 கிராம் வெள்ளி😁 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி ! சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி !
Our Executive Officer Sri Datuk L Meyyappan Annan’s Birthday was celebrated by all staff Members of NSWF in a simple manner at the clinic on 09th Oct 2019
Saraswathi Pooja / Ayutha Pooja conducted today at Nachandupatti Health Care Centre, a unit of NSWF.
20-09-2019 NSWF GREETINGS Thiru VE.L KUMAR, Virachilai of Kasiviswanathan Medical Agencies, Madurai has donated 1400 Ampules NEUROBION INJECTION to our Healthcare Center.(Value Rs 12000/-) We shall thank him for supporting and being partner in our Healthcare Services to rural communities. Our Hearty Thanks and best wishes to KUMAR
நமது இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று கண்ணாடி அணிவதற்கு தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளர்களுக்கு இன்று கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முதன் முறையாக கண்ணாடி அணியும் அனுபவம் பலருக்கு நம் அறக்கட்டளை வாயிலாக கிடைத்திருக்கிறது இந்த புதிய பார்வையை வழங்கிய விசாலாட்சி சிவனடியான் அறக்கட்டளைக்கு நன்றி சொல்வோம்.
குத்துச்சண்டை போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் கோகிலா கீர்ததிகா இருவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக,நேரில் அழைத்து பாராட்டி அன்புப் பரிசாக பணமும் நம் அறக்கட்டளை சார்பாக இன்று வழங்கப்பட்டது. வளரும் தலைமுறை மேலும் சிறக்க நாம் இயன்றதைச் செய்வோம்
NSWF 16-06-2019
The Board of Trustees of NSWF and The Visalatchi Sivanadiyan Charitable Trust, the sponsors of this EYE CAMP sincerely thank and appreciate Dr Venkataeswar Ravisankar and his TEAM for their excellent services for today’s THE 12 HOUR EYE CAMP.
Sir, the kind of service with the latest Equipments which could not have been dreamed by our rural kissans have been made possible with your service minded and dedicated Consultancy.
Please accept our whole hearted THANKS.
21 Nov 2018
Most of our Diabetic patients do not wear chappals or proper foot wear.
So NSWF decided to offer them at a reasonable cost.
MCR chappals specially made to product Diabetic Foot is offered to our patients @ a subsidised price of Rs 150/- against the market price of Rs 450/-
12 November 2018
நம் நற்சாந்துபட்டி மருத்துவ நல மையம் சார்ந்த ஓர் மகிழ்வான செய்தி.
இன்று நற்சாந்துபட்டியில் ஒருவருக்கு சர்க்கரை அளவு மிகக் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் நம் மருத்துவ மனையில் இருந்து டாக்டர் ரவீந்தர் ராம் அவர்கள் செவிலியர் மீனாவுடன் பாதிக்கப்பட்டவர் இல்லத்திற்கே சென்று தேவையான முதல் உதவி சிகிச்சை அளித்து, விரைந்து புதுக்கோட்டை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல அறிவுருத்தியிருக்கிறார்.
இன்று டாக்டர் திரு ராம மூர்த்தி அவர்களும் ஊரில் இல்லை.
இந்நிலையில் நம் மருத்துவ நல மையத்தின் உடனடி சிகிச்சையால் புதுக்கோட்டை மருத்துவ மனையில் பாதிக்கப்பட்டவர் தற்போது முழுதும் நலம் பெற்றிருக்கிறார்.
நம் மருத்துவர் ரவீந்தர் ராம், செவிலியர் மீனா மற்றும் நம் நலமையத்தை சார்ந்த பணியாளர்கள் அனைவரின் கடமை உணர்வை மனமுவந்து பாராட்டுவோம்.
நன்றியுடன் வாழ்த்துக்கள் !!!