12 November 2018
நம் நற்சாந்துபட்டி மருத்துவ நல மையம் சார்ந்த ஓர் மகிழ்வான செய்தி.
இன்று நற்சாந்துபட்டியில் ஒருவருக்கு சர்க்கரை அளவு மிகக் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் நம் மருத்துவ மனையில் இருந்து டாக்டர் ரவீந்தர் ராம் அவர்கள் செவிலியர் மீனாவுடன் பாதிக்கப்பட்டவர் இல்லத்திற்கே சென்று தேவையான முதல் உதவி சிகிச்சை அளித்து, விரைந்து புதுக்கோட்டை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல அறிவுருத்தியிருக்கிறார்.
இன்று டாக்டர் திரு ராம மூர்த்தி அவர்களும் ஊரில் இல்லை.
இந்நிலையில் நம் மருத்துவ நல மையத்தின் உடனடி சிகிச்சையால் புதுக்கோட்டை மருத்துவ மனையில் பாதிக்கப்பட்டவர் தற்போது முழுதும் நலம் பெற்றிருக்கிறார்.
நம் மருத்துவர் ரவீந்தர் ராம், செவிலியர் மீனா மற்றும் நம் நலமையத்தை சார்ந்த பணியாளர்கள் அனைவரின் கடமை உணர்வை மனமுவந்து பாராட்டுவோம்.
நன்றியுடன் வாழ்த்துக்கள் !!!