Thevaram Class in Nachandupatti
26 Nov 2022
நற்சாந்துபட்டியில் இன்று காலை தேவார இசை பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் 200 பேர் வரை வந்து, நம்மை ஆச்சரியப்படுத்தினார்கள். ஓதுவார் சிவ திரு முத்துக்குமார் சுப்பையா அவர்கள் மாணவர்களோடு அழகாக உரையாடலோடு பாடம் நடத்தினார்கள் அவருடைய குரல் அனைவரையும் கவர்ந்தது.
விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்க சாய் சூர்யா நடனப்பள்ளி குழுவினர் பொன்னார் மேனியனே என்ற பாடலுக்கு அழகுடன் நடனம் ஆடினர்.
மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளுக்குப் பதிலும் அளித்தனர்
விழா எல்லோரும் போற்ற இனிதே நிறைவு பெற்றது. இறுதியில் அனைவருக்கும் சுவையான உணவு திரு ராம் பாஸ்கர் திருமதி ஜெயா அவர்களால் வழங்கப்பட்டது.