Activities in New Year

18-01-2021

அனைவருக்கும் அன்புடன் வணக்கம்

நம் சமூகநல அறக்கட்டளை 2021 ஆம் ஆண்டில் காலடி வைத்தபின் காணும் சில மாற்றங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

1. அறம் செய விரும்பு எனும் இனிய பகிர்ந்து மகிழும் அனுபவத்தை அனைவர் மனதிலும் விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானதே நம் அறக்கட்டளை.இந்தப் பயணத்தில் நம்முடன் இணைந்து தொடர்ந்து வரும் அனைவரும் இந்த அனுபவத்தை உணர்ந்து மகிழ்ந்திருப்பார்கள். அவ்வண்ணம் உணர்ந்து மகிழ்ந்த ஒருவர் நம் அறக்கட்டளைக்கே கொடுத்து மகிழும் அனுபவத்தை அவருக்கு நம் அறக்கட்டளை வழங்கியிருக்கிறது.அதன் விளைவே இன்று திரு கிரில்லோ KR வீரப்பன் அவர்கள், தன் அன்புக்குரிய துணைவி திருமதி VR கல்யாணி ஆச்சி நினைவாக வழங்கியிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டிடம்.

2. மக்களுக்கு மிக அருகில், புதிய இடம், புதிய கட்டிடம், புதிய உணர்வுகளோடும் பொறுப்போடும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும் புத்தாண்டில் நம் பணிகள் தொடரட்டும்.

3. நம் இயன்முறைச் சிகிச்சை பிரிவு (Physiotheraphy) இன்னும் தன் சேவையை சிறப்பாக்க, புதிதாக ELECTRONIC INTERMITTENT TRACTION UNIT என்னும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது.இதன் மதிப்பு ரூ 25000. நம் சேவையில் இது மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சி.

4. திரு கிரில்லோ KR வீரப்பன் நமக்கு அன்பளிப்பாக வழங்கும் மருத்துவ மனைக் கட்டிடத்தின் பத்திரப் பதிவிற்கு ஆகும் முத்திரைத்தாள் மற்றும் தீர்வைக் கட்டணங்கள் ஆகிய செலவுகளை நம் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது. இதற்கான செலவு ரூ 100000 ஆகலாம். இதனை நாம் பெருமையுடன் பகிர்ந்து கொள்வோம்

5. மருத்துவ மனை கட்டிடத் திறப்புவிழா, 15-02-2021 அன்று மாண்புமிகு நீதி அரசர் திரு M சொக்கலிங்கம் அவர்கள் திறந்து வைக்க சீரோடும் சிறப்போடும் நடைபெற உள்ளது. இது நாம் அனைவரும் தவறாமல் பங்கேற்க, அண்ணன் கிரில்லோ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய விழா. பங்கேற்று மகிழ்வோம்.

Sundar SingaramComment