Deepavali Celebrations 2020

தீபாவளி கொண்டாட்டம் 2020

பெற்றதன் பயனை பிறருக்கும் கொடுப்போம்என்பதன் பொருள் உணர்ந்து, மற்றவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை விதைப்போம் என்பதை மெய்ப்பிக்க நாம் இந்த ஆண்டும் எளிய மக்களுக்கு தீபாவளிப் பரிசாக சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். சென்ற ஆண்டு 100 பேருக்கு வழங்கிய நாம் இந்த ஆண்டு 220 பயனாளிகளுக்கு இன்னும் தரமான பருத்தி சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். ரூ 122000/- மதிப்புள்ள இந்த பரிசுப் பொருட்கள் முற்றிலும் நன்கொடையாளர்களால் வழங்கப் படுகிறது.

இன்று காலை 30-10-2020 நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் திரு டத்தோ மெய்யப்ப அண்ணன் அவர்கள் பயனாளிகளுக்கு பரிசினை வழங்க, திருமதி தேனாள் ஆச்சி, திரு சம்பந்தம் செட்டியார் மற்றும் திரு இராமனாதன் செட்டியார் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கொடுத்து மகிழ்ந்த அந்த நிகழ்வை நாமும் கண்டு மகிழ்வோம்

Sundar SingaramComment